Posts

Showing posts from November, 2018

தஞ்சை பெரிய கோவில்

தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் என்றும் தஞ்சைப் பெரிய கோயில் ("Big temple") அல்லது தஞ்சைப் பெருவுடையார் கோயில் ("Peruvudayar Temple") என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும்[1] அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியக் கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. கிபி 11-ஆம் நூற்றாண்டில் முதலாம் இராஜராஜ சோழன் இக்கோயிலைக் கட்டுவித்தான்.1003-1004 ஆம் ஆண்டு தொடங்கி 1010ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010வது ஆண்டோடு 1000 ஆண்டு நிறைவடைந்தது

ஒலைச்சுவடி

இந்தியாவிலும் அயல்நாடுகளிலும் சுமார் 30,000 ஓலைச்சுவடிகள் பதிப்பிக்கப்படாமல் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. பின்வரும் விகிதத்தில் இந்தியாவில் ஓலைச்சுவடிகள் உள்ளன: *மருத்துவம் – 50% *சோதிடம் – 10% *சமயம் – 10% *கலை, இலக்கியம் – 10% *வரலாறு – 5% *இலக்கணம் – 5% *நாட்டுப்புற இலக்கியம் – 10%        தமிழ்நாட்டில் ஓலைச்சுவடிகள் உள்ள இடங்கள்:  *சென்னை சென்னைப் பல்கலைக்கழகக் கீழ்த்திசைச் சுவடி நூலகம் உ. வே. சா. நூல் நிலையம் பிரமஞான சபை நூலகம் தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம் ஆசியவியல் ஆய்வு நிறுவனம். *காஞ்சிபுரம் காமகோடி பீடம், ஸ்ரீ சங்கராசாரியார் மடம். *பாண்டிச்சேரி பிரஞ்சிந்திய கலைக்கழகம். *விருத்தாசலம் குமார தேவ மடாலயம், விருத்தாசலம். *திருச்சி குமார தேவ மடாலயம், துறையூர் *தஞ்சை சரசுவதி மகால் நூலகம் தமிழ்ப் பல்கலைக்கழகம் தருமபுர ஆதீன மடாலயம், மயிலாடுதுறை ஸ்ரீ காசி மடம், திருப்பனந்தாள் திருவாவடுதுறை ஆதீனம், திருவாவடுதுறை *மதுரை தமிழ்ச்சங்கம், மதுரை மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை *கோவை தவத்திரு சாந்தலிங்க அட

கலிலியோ

கலிலியோ பற்றிய அறிய தகவல்கள்.............. தனது சூரிய மண்டலம் பற்றிய கருத்துகளால் வாட்டிக்கான் சிட்டி கத்தோலிக்க நிர்வாகத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான கலிலியோ, 1633ம் ஆண்டு வீட்டுக்காவலில் வைக்க உத்தவிடப்பட்டார். 1638ம் ஆண்டு அவருக்கு இரு கண்களும் பாதிக்கப்பட்டு, பார்வை இழந்தார். 1642ம் ஆண்டு தனது வீட்டில் உயிரிழந்தார். கலிலியோ இறந்து 100 ஆண்டுகள் கழிந்த பின், 1737ம் ஆண்டு அவரது உடலின் எஞ்சிய பாகங்கள் அனைத்தும், கல்லறையிலிருந்து மீண்டும் வெளியே எடுக்கப்பட்டு, சாண்டா குரோஸ் தேவாலயத்தில் அமைக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது ஆண்டன் பிரான்செஸ்கோ என்பவர் கலிலியோவின் வலது கை நடுவிரலை எடுத்து பத்திரப்படுத்தினார். அந்த விரல் தற்போது பதப்படுத்தப்பட்டு, இத்தாலியின் புளோரன்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மரம்

நம் எல்லோருக்கும் உலகிலேயே மிகப்பெரிய காடு எது என்று கேட்டால் தெரியும் . உலகிலேயே மிகவும் அழகான மரங்களைக் கொண்டு அழகாக காட்சிதரும் இடம் எது என்று கேட்டாலும் தெரியும் . ஆனால் உலகத்தில் அதிக எடையைக் கொண்ட மிகப்பெரிய மரம் எது ! ? அது எங்குள்ளது ? அந்த மரத்தின் பெயர் என்ன என்று கேட்டால் நம்மில் பலருக்கு பதில் தெரியாது . சரி அப்படி உலகிலேயே மிகப் பெரிய மரம் எங்குதான் இருக்கிறது !?             சொல்கிறேன் உலகிலேயே எடை அதிகமான மரம் கலிபோர்னியாவில் உள்ள *ஜெனரல் ஷெர்மன்* என்ற மரம்தானாம் .கடந்த ஆண்டு மரங்களின் வளர்சிக் கணக்கெடுப்பின்படி படி இதுவரை இந்த மரத்தின் சாதனையை வேறு எந்த மரமும் வெற்றி கொள்ளவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் . அது மட்டும் இல்லாது ஒரே நேரத்தில் இந்த மரத்தின் நிழலில் மனிதர்களாகிய நம்மை நிற்க வைத்தால் இரண்டரை லட்சம் மக்கள் தங்கள் மேல் வெயில்படாமல் மாலை வரை அமர்ந்திருக்கலாம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் .இறுதியான கணக்கெடுப்பின் படி அந்த மரத்தின் எடை சுமார் 2,800 டன் என்றும் ., அடிபாகச் சுற்றளவு 135 அடியாம் . அதன் உயரமோ 260 அடி என்றால் யூகித்துக்கொள்ளுங்கள் எவ்வளவு பெரிய ம

பொது அறிவு

. * உலகில் அதிக அளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம், பனாமா கால்வாய். * விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த நாடு, ஜெர்மனி. * திரவத்தங்கம் என்றழைக்கப்படுவது `பெட்ரோலியம்'. * தபால்தலையை (ஸ்டாம்ப்) வட்ட வடிவமாக வெளியிட்ட நாடு மலேசியா. * உடலில் ரத்தம் பாயாத பகுதி கருவிழி. *உலகின் மிகப்பெரிய பூங்கா கனடாவில் உள்ள `உட் பபெல்லோ நேஷனல் பார்க்'. * உலகின் மிகப்பெரிய உயிரியல் பூங்கா அமெரிக்காவில் உள்ள `டொராண்டோ உயிரியல் பூங்கா'. ★1972-ம் ஆண்டு வங்காள தேசத்தின் தேசிய விளையாட்டாக கபடி அறிவிக்கப்பட்டது. சஞ்சீவனி, காமினி மற்றும் அமர் ஆகிய பெயர்களில் 3 விதங்களில் கபடி ஆட்டம் நடைபெறுகிறது. 1990-ம் ஆண்டு பீஜிங் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதல் முதலாக கபடி ஆட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் இருந்து இதுவரை நடைபெற்ற அனைத்து ஆசிய போட்டிகளிலும் இந்தியா தங்கப்பதக்கம் வென்றுள்ளது. 2004-ம் ஆண்டு முதல் உலக கோப்பைக்கான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், முதல் போட்டியில் இருந்து இதுவரை நடைபெற்ற போட்டிகளில் இந்தியா சாம்பியன் பட்டம் பெற்று முன்னணியில் திகழ்கிறது.

இயற்கணிதம்

இன்று எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இயற்கணிதம் பாடத்தில் இயற்கணிதக் கோவைகளை காரணிப்படுத்தும் முறைகள் குறித்தும் படிகள் குறித்தும் நடத்தினைன்.இயற்கணிதக்கோவைகளை காரணிப்படுத்தும் முறைகளான பொதுக்காரணியை வெளியே எடுத்து காரணிப்படுத்துதல் மற்றும் இயற்கணித முற்றொருமைகளை பயன்படுத்தி காரணிப்படுத்துதல் குறித்தும் நடத்தினேன்.ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு செயல்பாடுகள் செய்வதற்கு நான் உதவி செய்தேன்.

குளிர்சாதனப்பெட்டி

குளிர்சாதனப்பெட்டி ...      ஒரு காலத்தில் ஆடம்பரத்தேவையாக இருந்த குளிர்சாதனப்பெட்டி தற்போது அடிப்படை தேவையாக உள்ளது.குறிப்பாக நம் அனைவரிடமும் முட்டைகளை வாங்கி குளிர்சாதனப்பெட்டியில் வைத்து உபயோகித்தல் வழக்கமாக உள்ளது.அவ்வாறு பயன்படுத்தக்கூடாது ஏனெனில் கோழி முட்டையிடும் போது அதன் ஓடுகளில் சால்மொனெல்லா பாக்ட்டரியா உருவாவது இயல்பு .அது சாதரன வெப்ப நிலையில் வளர்வது இல்லை.ஆனால் குளிர்சாதனப்பெட்டியில் பாக்ட்டீரியா வளர சாதகமான தட்பவெட்ப நிலை உள்ளதால் அது பன்மடங்கு பெருகுகிறது.இதனால் நம் உடலுக்கு பல்வேறு பாதிப்புகள் வருகின்றன.எனவே முட்டைகளை குளிர்சாதன பெடாடியில் வைத்து உபயோகிக்ககூடாது.

மூளை

நமது உடலில் உள்ள மொத்த கலோரிகளில் 20 % மூளையால் தான் எரிக்கப்படுகிறது.2% மட்டுமே உடலால் எரிக்கப்படுகிறது.   இன்று நான் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இயற்கணிதம் பாடத்தில் இயற்கணித முற்றோறுமைகளை பயன்படுத்தும் சில கணக்குகளை நடத்தினேன்.மேலும் செய்முறை வடிவியல் பாடத்தில் சாய்சதுரம் வரைதலை தேர்வு வைத்தேன்

உடல்

இன்று நம் மனித உடல் பற்றிய சில தகவல்களை தெரிந்து கொண்டேன்.நம் உடலில் உள்ள இரத்த நாளங்களின் நீளம் 96000 கிலோமீட்டர்.நாம் உடலில் அதிக எழும்புகள் கை மற்றும் கால்களில் தான் உள்ளது மொத்தம் 54 எழும்புகள் உள்ளது.    நாம் குடித்து முடித்த பின் நடந்த நிகழ்வுகள் மறப்பதற்கான காரணம் அப்போது நடக்கும் நிகழ்வுகள் பிளாங் அவுட் ஆகிறது.அந்த நிகழ்வுகள் அனைத்தையும் சேமிக்க மூளை தவறுகிறது.இதனால் தான் அவை அவை நமக்கு மறக்கின்றது.

குழந்தைகள் தினம்

இன்று எங்களின் பள்ளியில் குழந்தைகள் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.குழந்தைகள் ஆர்வமுடன் பேச்சுப்போட்டி விழையாட்டு போட்டிகளில் பங்கேற்றனர்.நம் சுதந்திர இந்தியாவின் முதல் பாரத பிரதமர் மற்றும் சுதந்திர போராட்ட தியாகியுமான ஜவகர்லால் நேரு அவர்களின் நினைவாக குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.இவர் 1889 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி பிறந்தார்.இவர் சுதந்திர போராட்டத்தின் போது 9 முறை சிறை சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.இவரது ஒரே மகள் இர்திரா பிரியதர்சினி தன்னுடைய பெயரை இந்திரா காந்தி என மாற்றிக் கொண்டார்.

பழங்கள்

நம் மூளை சுருசுருப்பாக இருக்க உதவுவது பழங்கள் ஆகும்.நம் முன்னோர்கள் சித்தர்கள் பழம் காய்கறிகள் சாப்பிட்டதால் தான் நீண்ட காலம் நலமுடன் வாழ்ந்து வந்தனர்.நாம் தினமும் ஒரு கப் பழங்கள் அதாவது 250 கிராம் பழங்கள் சாப்பிட்டு வந்தால் நமக்கு முதுமை தள்ளிப் போகும் ஜீரண மண்டலம் நலமாகும் .மேலும் கண் பார்வை தெளிவாகும்.நீண்ட நாள் நலமுடனும் வாழலாம்.

தபால் நிலையம்

★ உலகில் அதிக நபர்கள் பங்கேற்கும் விழாவாக கும்பமேளா உள்ளது.இந்த விழாவில் சுமார் 1 கோடி யாத்ரீகர்கள் பங்கேற்கின்றனர். ★மிதக்கும் தபால் நிலையம் இந்தியாவில் srinagar  இல் 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தால் ஏரியில் அமைக்கப்பட்டது.இந்த தபால் நிலையம் படகில் அமைந்துள்ளது.இந்த தபால் நிலையத்திற்கு படகில் ஏறி தான் செல்ல வேண்டும். உலகில் அதிக தபால் நிலையங்கள் உள்ள இடம் இந்தியா.சுமார்155015 தபால் நிலையங்கள் உள்ளன. ★ உலகில் அதிக ஈரப்பதம் நிறைந்த இடமாக மேகாலயாவில் maysynram என்ற இடம் உள்ளது.இது கடந்த 1861 ஆம் ஆண்டு சிரப்புஞ்சியில் பெய்த மழையை விட அதிகம் பெற்ற வாழிடமாக கருதப்படுகிறது.

தண்ணீர்

தண்ணீர் நாம் தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் உடல் சுத்தமாகி உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.அதிகாலையில் தண்ணீர் குடிப்பதால் இரத்தத்தில் உள்ள சிவப்பனுக்கள் அதிகரிக்கும்.நம்முடைய குடல் சுத்தமாக இல்லை என்றால் முகத்தில் பருக்கள் தோன்றும்.நாம் தினமுன் வெரும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதன் மூலம் குடல் சுத்தமாகி பருக்கள் தோன்றுவது குறைவதுடன் முகம் பொலிவுடன் இருக்கும்

தண்ணீர்

நாம் தினமும் காலையில் வெரும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் நம்முடைய உடல் சுத்தமாகும்.மேலும் நம் இரத்தத்தில் உள்ள சிவப்பனுக்கள் அதிகரிக்க உதவிபுரிகின்றது.உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் காலையில் தண்ணீர் குடித்து வரலாம்.நம்முடைய குடல் சுத்தமாக இல்லையென்றால் முகத்தில் பருக்கள் தோன்றும்.தினமும் காலையில் தண்ணீர் குடிப்பதால் குடல் சுத்தமாவதால் முகம் பொலிவுடன் காணப்படும்.

கணிதம்

இன்று எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம் பாடத்தில் இயற்கணிதம் பாடத்தில் முற்றோருமைகள் குறித்து எடுத்துக்கூறி இயற்கணித முற்றொருமைகள் குறித்து விளக்கி நடத்திய பின் அவற்றை படிக்க வைத்தேன்.மாலை பள்ளி மாணவர்கள் அனைவருக்கும்  உடற்பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

பூனை

பூனைகள் நாய்களுக்கு அடுத்த படியாக வளர்க்கப்படும் செல்ல பிராணியாகும்.பூனைகள் ஒரு சோம்பேறியாகும் தனது வாழ்நாளில் 70% தூங்கியே கழிக்கின்றன.உணவு விஷயத்தில் பூனை ஒரு சந்தேகபிராணி ஒன்றுக்கு இரு முறை சோதித்த பின்னரே உணவு உண்ணும்.மனிதனுக்கு தோலின் மூலம் வியர்வை வெளியேறுவது போல பூனைகளுக்கு கால் பாதங்களின் மூலம் வயர்வை வெளியேற்றுகின்றன போன்ற தகவல்கள் நான் தெரிந்து கொண்டேன். இன்று எங்களின் பள்ளியில் தொழுநோய் குறித்த விழிப்புணர்வை தலைவாசல் ஆரம்ப சுகாதாரநிலையத்தில் இருந்து வந்த மருத்துவர்கள் மாணவர்களுக்கு கொடுத்தனர்

செம்பு

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி பயன்படுத்தும் பழக்கம் இருந்து வந்தது.இவ்வாறு பயன்படுத்துவதன் மூலம் நம் உடல் எழும்புகள் பலமடைகின்றன்.மேலும் குழந்தைகள் மற்றும் பெண்களை பாதிக்கும் இரத்தசோகை நோய் வராமல் தடுக்கின்றன.இவை ஆன்டிஆக்ஸிடன்டுகளாக பயன்படுகின்றன.செம்பு பாத்திரத்தில் ஊற்றிய நீரை குடிக்கவும் சமையலுக்கும் பயன்படுத்துவதன்மூலம் நம் நோய்களை தடுக்கலாம்.

விமானம்

நம்முடைய  உலக இயக்கங்கள் சுருங்கி போனதற்கு முக்கிய காரணம் விமானம் ஆகும்.பறவைகள் பறப்பதை பார்த்த ரைட் சகோதரர்கள் 17 டிசம்பர் 1903 ஆம் ஆண்டு கண்டுபிடித்தனர்.  ★இதற்கு முன்னே ஒருவர் விமானத்தை கண்டுபிடித்துவிட்டார் என்றால் நம்ப முடிகிறதா ?...       ◆ஆம் Richard pearce என்பவர்  மார்ச் 31 ஆம் தேதி 1903 ஆம் நாள் விமானத்தை முதன் முதலில் இயக்க  இயக்கி காட்டினார். இதை சரிசெய்து மே 11 ஆம் தேதி 1903 ஆம் தேதி இயக்கிய போது நொருங்கிவிட்டது .பின்பு சரிசெய்வதற்குள் ரைட் சகோதரர்கள் முந்திக் கொண்டனர்.இதுவே வரலாற்று தகவல்