மரம்
நம் எல்லோருக்கும் உலகிலேயே மிகப்பெரிய காடு எது என்று கேட்டால் தெரியும் . உலகிலேயே மிகவும் அழகான மரங்களைக் கொண்டு அழகாக காட்சிதரும் இடம் எது என்று கேட்டாலும் தெரியும் . ஆனால் உலகத்தில் அதிக எடையைக் கொண்ட மிகப்பெரிய மரம் எது ! ? அது எங்குள்ளது ? அந்த மரத்தின் பெயர் என்ன என்று கேட்டால் நம்மில் பலருக்கு பதில் தெரியாது . சரி அப்படி உலகிலேயே மிகப் பெரிய மரம் எங்குதான் இருக்கிறது !?
சொல்கிறேன் உலகிலேயே எடை அதிகமான மரம் கலிபோர்னியாவில் உள்ள *ஜெனரல் ஷெர்மன்* என்ற மரம்தானாம் .கடந்த ஆண்டு மரங்களின் வளர்சிக் கணக்கெடுப்பின்படி படி இதுவரை இந்த மரத்தின் சாதனையை வேறு எந்த மரமும் வெற்றி கொள்ளவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் . அது மட்டும் இல்லாது ஒரே நேரத்தில் இந்த மரத்தின் நிழலில் மனிதர்களாகிய நம்மை நிற்க வைத்தால் இரண்டரை லட்சம் மக்கள் தங்கள் மேல் வெயில்படாமல் மாலை வரை அமர்ந்திருக்கலாம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் .இறுதியான கணக்கெடுப்பின் படி அந்த மரத்தின் எடை சுமார் 2,800 டன் என்றும் ., அடிபாகச் சுற்றளவு 135 அடியாம் . அதன் உயரமோ 260 அடி என்றால் யூகித்துக்கொள்ளுங்கள் எவ்வளவு பெரிய மரமாக இருக்குமென்று!!!!!!!!!!!!!!
Comments
Post a Comment