Posts

Showing posts from February, 2018

பள்ளி

இன்று பாலினம் ,சமூகம்,பள்ளி பாடத்தில் சிறுமிகள் மற்றும் பெண்கள் மீதான வன்முறையும் அதை தடுக்கும் வழிமுறைகள் , பெண்களுக்கு குடும்பம் ,பள்ளி ,பணி புரியும் இடங்களில் ஏற்படும் வண்முறைகள் அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் படித்தேன்

இலட்சியம்

இன்று என்னுடைய ஆசிரியர் ஓர் கதை கூறினார். நாணல்,முருங்கை மரம்,மூங்கில் மூன்றும் இறந்த பிறகு மேலோகத்திற்கு சென்றது.அங்கு சித்திரகுப்தன் எமதர்மரிடம் பாவம் புன்னியம் கணக்கு கூரிக்கொண்டிருந்தார்.அப்போது நாணல் நான் சொர்கத்திற்கு தான் போவேன் என மகிழ்ச்சியில் இருந்தது .மற்றவர்கள் பயத்துடன் இருந்தனர்.முதலில் நாணல் நரகத்திற்கு செல்ல வேண்டும் எனவும் முருங்கை மரம் 7 வருடத்திற்கு நரகம் பின் சொர்கத்திற்கும் எனவும் மூங்கில் சொர்கத்திறாகு செல்ல வேண்டும் எனவும் முடிவு கூறப்பட்டது .நாணல் சோகத்துடன் ஏன் மூங்கில் மட்டும் சொர்க்கம் என கேட்டது .அதற்கு எமதர்மர் மூவரிடமும் அவர்கள் இருந்த இடத்தை பார்க்கும் படி கூறினார். நாணல் இருந்த இடம் அழுகிய படி இருந்தது முருங்கை மரம் இருந்த இடத்தில் மரம் வெட்டப்பட்டு ஓரமாய் கிடந்தது மூங்கல் ஏணி,கூரை ,கூடை,விறகு என பல விதமாக பயன்பட்டது. இதன் அடிப்படையில் தான் முடிவுகள் கூறினேன் என்று கூறினார். இதில் இருந்து நாணல் ~ சுயநலவாதி     முருங்கை மரம் ~ எதார்த்த வாதி     மூங்கில் ~ இலட்சிவாதி நாம் மூங்கிலை போன்று இலட்சியவாதியாக இருக்க வேண்டும் என தெரிந்து கொண்டேன்

மாதிரிகள்

இன்று இரண்டாம் ஆண்டு மாணவர்கள் செய்த கற்றல் கற்பித்தல் மாதிரிகளை நாங்கள் பார்த்தோம்.அனைத்தும் மிக அற்புதமாக இருந்தது.பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தது.மாலை விளையாடினோம்

தேர்வு

இன்று இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு இரணடாம் நாளாக  செயல்முறைத் தேர்வு இன்று நடந்து முடிந்தது.அனைத்து மாணவர்களும் அவர்களின் Record நோட்டை சமர்பித்து கையெழுத்து வாங்கிக் கொண்டனர்.

செயல்முறை தேர்வு

இன்று இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு செயல்முறைத் தேர்வு நடந்தது .அனைவரும் மிகச் சிறப்பாக செய்தனர் .செயல் முறை தேர்விற்கு வந்த ஆசிரியர்களை நாங்கள் வரவேற்றோம்.பிறகு அவர்களுக்கு சிற்றுண்டி வழங்கினோம். மாணவர்களுக்கு தேநீர் மற்றும் சிற்றுண்டி வழங்கினோம்.இந்த அனுபவம் மிகவும் இனிமையாக இருந்தது

யோகா

இரண்டாம் ஆண்டு மாணவர்களுச் செயல்முறைத்தேர்வு நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்க இருப்பதால் நடக்க இருப்பதால் அவர்கள் தயார் ஆகி கொண்டிருந்தனர்.எங்களுக்கு எங்களுடைய உடற்கல்வி ஆசிரியர் யோகா கற்றுத்தந்தார்.மேலும் யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து கூறினார்.மேலும் விளையாட்டு குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும் கூறினார்.

தேர்வு

இன்று காலை கற்றலும் கற்பிததல் பாடத்தில் விளைபயன்மிக்க கற்பித்தல் குறித்து படித்து தேர்வு எழுதினேன். தற்கால இந்தியாவும் கல்வியும் பாடத்தில் தாராளமயமாக்கல் குறித்து படித்தே ன்

கற்பித்தல்

இன்று காலை தற்கால இந்தியாவும் கல்வியும் பாடத்தில் உலகமயமாக்கல் குறித்து தேர்வு எழுதினேன்.குழந்தை பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சியும் பாடத்தில் குமர பருவத்தினரின் பிரச்சனைகள் குறித்து படித்தேன்.கற்றலும் கற்பித்தலும் பாடத்தில் கற்பித்தலின் பண்புகள் குறித்து தேர்வு எழுதினேன்

கதை

ஒரு ஊரில் காக்கா காக்கா என்று ஒரு காகம் இருந்தது . ஒரு பாட்டி அங்கு வடை செய்து கொண்டிருந்தார். அந்த காகம் அந்த பாட்டியிடம் சென்று ஒரு வடை தருமாறு கேட்டது.பாட்டியும் தருவதாக கூறினார். அந்த காகம் பதிலுக்கு வடை செய்வதற்கு குச்சிகளை எடுத்துவந்து தந்தது.பாட்டியும் ஒரு வடை தந்தார்.காகம் வடையை வாங்கி கொண்டு மரத்தில் அமர்ந்தது. அந்த வழியே ஒரு நரி வந்தது.அந்த நரி காகத்திடம் நீ அழகாக இருக்கிறாய் ஒரு பாடல் பாடு என கேட்டது.காகமும் புகழ்க்கு மயங்கி வாயில் வடை இருப்பதை மறந்து பாடியது வடை கீழே விழுந்தது நரி எடுத்துக்கொண்டது.உடனே காகம் கத்தியது.அதைக்கேட்டு காகக்கூட்டங்கள் வந்து நரியை கொத்தி தின்று விட்டன. இக்கதையில் இருந்து 1.தன்னை அறிமுகம் செய்து கொள்தல் 2.தமக்கு உதவியவர்களுக்கு திரும்ப உதவுதல் 3.உழைப்பிற்கு உரிய ஊதியம் பெற்றுக்கொள்தல் 4.உழைத்தது என்றும் வீன் போகாது போன்றவற்றை தெரிந்து கொண்டேன்

தேர்வு

இன்று காலை கற்றலும் கற்பித்தலும் பாடத்தில் மாணவர்கள் வகுப்பறையில் இருக்கும் பல்வேறு நிலைகளும் மூன்று விதமான வகுப்பறைகளும் குறித்து தேர்வு எழுதினேன்.தற்கால இந்தியாவும் கல்வியும் பாடத்தில் மொழி பிரச்சனை குறித்து இந்தியாவின் மூன்று அறிஞர்கள் கருத்து குறித்து தேர்வு எழுதினேன்

பாடம்

இன்று நான் ஏழாம் வகுப்பு மூன்றாம் பருவ புத்தகத்தில் அளவைகள் பாடத்தில் வட்டத்தின் பரிதியை குறித்து பாடம் (seminar)எடுத்தேன்.வட்டத்தின் சுற்றளவை முதன் முதலில் தொன்மையான தமிழ் கணக்கதிகாரம் என்னும் நூலில் 50 வது பாடலில் கூறியுள்ளனர்.என தோழி பவித்ரா இருவரும் பாடம் நடத்தினர்

மனம்

Signmund freud -  father of modern psychology அவர்கள் எண்ணங்கள் தான் நமது வாழ்வை தீர்மாணிக்கின்றன என்று கூறுகிறார். நம்முடைய மனது மூன்று வகைப்படும் அவை இட் ,ஈகோ,சூப்பர் ஈகோ ஆகும். இட் அவமானம் தோல்விகளை சேமிக்கும் .ஈகோ இப்போது நடப்பதில் கவனம் கொடுக்கும்.சூப்பர் ஈகோ நல்ல விஷயங்களை காட்டும். என்பதை நான் இன்று தெரிந்து கொண்டேன்

மருத்துவர்

கிராமப்புறத்தில் இருந்து வந்த ஒரு மாணவன் தன் கடின உழைப்பால் நகரத்தில் மருத்துவர் ஆகிறார் .அங்கு வேலை பழுவின் காரணமாக மன அழுத்தம் ஏற்படுகிறது.அதில் இருந்து தன் சொந்த கிராமத்திற்கு ஒரு வாரம் தங்கிச் செல்ல வருகிறார்.தன்னுடைய ஒரு நண்பரை சந்தித்து பின் மற்றோறு நண்பரை சந்திக்க மலை மேல் இருவரும் மகிழ்வுந்தில் சென்றனர்.அவருடைய நண்பருக்கு தலை வலித்ததால் நண்பரிடம் மாத்திரை கேட்டார்.அவரும் தன் நண்பரை கண்களை மூடச்செய்து பின் மாத்திரையை போட்டு விட்டு சப்பிவிட்டு துப்பிவிட கூறினார்.பின் தலை வலி சரியானதாக கூறினார்.பின்பு தான் அந்த மருத்துவர் அது மாத்திரை அல்ல சட்டைபட்டன் என கூறினார். இதில் இருந்து நான் நாம் நம்பிக்கை கொடடிருந்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்று தெரிந்து கொண்டேன்

பாம்பு

இன்று நான் திட்டி விடம் பாம்பு குறித்து தெரிந்து கொண்டேன்.திட்டி விடம் பாம்பு கண்களால் பார்த்தாலே விஷம்.நேருக்கு நேர் கண்களில் விஷத்தை பாய்ச்சும்.பின்பு படித்ததை எவ்வாறு நினைவில் வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து தெரிந்து கொண்டேன்.1.படிக்கும் சூழல் அமைதியாக இருக்க வேண்டும்.2.கவனச்சிதறலை தவிர்க்க வேண்டும்.3.திரும்ப சொல்லிப்பார்க்க வேண்டும்.4.யாருக்கவது சொல்லித்தர வேண்டும்.5. நல்ல உணவு உண்ண வேண்டும்.6.மன அழுத்தம் இன்றி இருக்க வேண்டும்.7.சரியாக தூங்க வேண்டும். இவ்வாறு படித்தால் படித்ததை நினைவில் வைத் துக்கொள்ளலாம்

இரத்தம்

இன்று கற்றலும் கற்பித்தலும் பாடத்தில் ஆசிரியர் மாணவர் நல்லுறவு குறித்து தேர்வு எழுதினேன். தற்கால இந்தியாவும் பாடத்தில் மும்மொழித்திட்டம் பற்றி தேர்வு எழுதினேன். பின்பு மனித இதயம் கார்டியாக் தசைகளால் ஆனது,இதயம் நான்கு அறைகளால் ஆனது . வலது பக்கம் இருக்கும் இரு அறைகள் ஆக்சிஜன் அற்ற இரத்தையும் இடப்பக்கம் இருக்கும் இரு அறைகள் ஆக்சிஜனேற்றம் செய்த இரத்தம் கொண்டிருக்கும்.இரத்தத்திற்கு சிவப்பு நிறத்தை தருவது ஹீமோகுலோபின் என்னும் நிறமி ஆகும்.இரத்தத்தில் சிவப்பு அனுக்கள் ,வெள்ளை அனுக்கள் உள்ளன. சிவப்பு அனுக்களின் வாழ் நாள் 120 நாட்கள் ஆகும். வெள்ளை அனுக்களின் வாழ்நாள் 4 வாரம் ஆகும். வெள்ளை அனுக்கள் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.

ஜீரனமண்டலம்

இன்று தற்கால இந்தியாவும் கல்வியும் பாடத்தில் சுதந்திரத்திற்கு பின் இந்தியாவில் ஏற்பட்ட மொழிக்கொள்கை குறித்து தேர்வு எழுதினேன் பின் மனித ஜீரனமண்டலம் குறித்து தேர்வு எழுதினேன்.

கல்வி

இன்று தற்கால இந்தியாவும் கல்வியும் பாடத்தில் கல்விக்கு நிதி திரட்டும் வழிமுறைகள் குறித்து தேர்வு எழுதினேன்.கணிதம் கற்பித்தல் பாடத்தில் குறுநிலை கற்பித்தல் எடுத்தனர்

ஆன்மா

இன்று தற்கால இந்தியாவும் கல்வியும் பாடத்தில் பத்து,பதினொன்று,பன்னிரண்டாம் ஐந்தாண்டு திட்டம் குறித்து தேர்வு எழுதினேன் .பின்பு என்னுடன் பயிலும் மாணவர் ஒருவர் seminar எடுத்தார். அப்போது ஒரு சுவாரசியமான தகவலை நான் தெரிந்து கொண்டேன். அது என்னவென்றால் அமெரிக்காவில் அறிஞர்கள் சிலர் ஆய்வு மேற்கொண்டனர் அதாவது ஐந்து நாட்களில் இறக்க இருக்கும் ஒரு வயதானவரை காற்று கூட வெளியில் வர முடியாத ஒரு கண்ணாடி பெட்டியில் அடைத்தனர் அவர் உயிர் சிறிது நேரத்தில் பிரிந்தது அப்போது நீல நிறத்தில் ஒரு வெளிச்சம் வெளியில் வந்தது அது மிகவும் கெட்டியான அந்த கண்ணாடி பெட்டியை உடைத்து கொண்டு வெளியில் வந்தது .இதை கண்ட அறிஞர்கள் நம் இறந்த பிறகு நம் உடலில் இருந்து ஆன்மா வெளியேறுகிறது என்று தங்களது ஆய்வை முடித்தனர்.

கற்பித்தல்

இன்று காலை கணிதம் கறபித்தல் பாடத்தில் OHP projector வைத்து நுண்நிலைக் கற்பித்தல் எடுத்தனர்.

ஆங்கிலம்

இன்று மதியம் எங்கள்ஆசிரியர் ஒரு கதை கூறினார். ஒரு தாய் பூனையும் அதன் குட்டி பூனையும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தது.அப்போது ஒரு நாய் அவர்களை துரத்தியது.இரு பூனைகளும் மியாவ் மியாவ் என கத்திக்கொண்டு ஓடியது , அதை நாய் பவ் பவ் என கத்திக்கொண்டு துரத்தியது.சிறிது தூரம் சென்று அப்பூனை நின்று திரும்பி பவ் என கத்தியது அதை கண்டு நாய் பயந்து ஓடியது .பின்பு அந்த குட்டிப்பூனை தன் தாயிடம் ஏன் பவ் என கத்தினாய்  என கேட்டது அதற்கு தாய் பூனை இப்போது புரிந்து கொண்டாயா இரண்டாம் மொமழியின் முக்கியத்துவத்தை என்று கூறியது.இதில் இருந்து ஆங்கிலத்தை கண்டு பயப்படக்கூடாது என தெரிந்து கொண்டேன்

Study technique

இன்று மதியம் குறுகிய காலத்தில் தேர்வுக்கு எவ்வாறு தயார் ஆவது என்று தெரிந்துகொண்டேன் . 1.எதை குறித்தும் கவலை கொள்ளக்கூடாது 2.5 நிமிடம் நாம் செய்ய வேண்டியதை மந்திரம் போல் திரும்ப திரும்ப கூற வேண்டும். 3.கால அட்டவணை போட்டுக்கொள்ள வேண்டும் 4. சரியாக தூங்க வேண்டும் 5.சத்தமாக திரும்ப கூற வேண்டும். இந்த 5 படிநிலையை படிக்கும் போது பின்பற்ற வேண்டும் மேலும் எப்போதும் "I have high sef confident, I am a achieving person, I can do anything" போன்ற எண்ணத்தை கொண்டிருக்க வேண்டும். ஒரு நாளுக்கு 5 முதல் 6 மணி நேரம் தூங்க வேண்டும் போன்ற தகவல்களை என்னுடைய psychology mam  கூறினார்கள்

கற்றல்

இன்று காலை கற்றலும் கற்பித்தலும் பாடத்தில் பள்ளிக்கு உள்ளே கற்றல் மற்றும் பள்ளிக்கு வெளியேக் கற்றலின் நோக்கங்கள் குறித்து வகுப்புத் தேர்வு எழுதினேன்.தற்கால இந்தியாவும் கல்வியும் பாடத்தில் முதல் மற்றும் இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் குறித்து தேர்வு எழுதினேன்.

Seminar

இன்று காலை தற்கால இந்தியாவும் கல்வியும் பாடத்தில் கல்வியில் தனியார்மயமாக்கலை அனுமதிப்பதற்கான காரணங்கள் குறித்தும் கல்வியில் தன்யார்மயமாக்கலை அனுமதிப்பதால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்தும் பாடம் (seminar) எடுத்தேன் .இது எனக்கு வித்யாசமான அனுபவமாக இருந் தது