இலட்சியம்
இன்று என்னுடைய ஆசிரியர் ஓர் கதை கூறினார். நாணல்,முருங்கை மரம்,மூங்கில் மூன்றும் இறந்த பிறகு மேலோகத்திற்கு சென்றது.அங்கு சித்திரகுப்தன் எமதர்மரிடம் பாவம் புன்னியம் கணக்கு கூரிக்கொண்டிருந்தார்.அப்போது நாணல் நான் சொர்கத்திற்கு தான் போவேன் என மகிழ்ச்சியில் இருந்தது .மற்றவர்கள் பயத்துடன் இருந்தனர்.முதலில் நாணல் நரகத்திற்கு செல்ல வேண்டும் எனவும் முருங்கை மரம் 7 வருடத்திற்கு நரகம் பின் சொர்கத்திற்கும் எனவும் மூங்கில் சொர்கத்திறாகு செல்ல வேண்டும் எனவும் முடிவு கூறப்பட்டது .நாணல் சோகத்துடன் ஏன் மூங்கில் மட்டும் சொர்க்கம் என கேட்டது .அதற்கு எமதர்மர் மூவரிடமும் அவர்கள் இருந்த இடத்தை பார்க்கும் படி கூறினார். நாணல் இருந்த இடம் அழுகிய படி இருந்தது முருங்கை மரம் இருந்த இடத்தில் மரம் வெட்டப்பட்டு ஓரமாய் கிடந்தது மூங்கல் ஏணி,கூரை ,கூடை,விறகு என பல விதமாக பயன்பட்டது. இதன் அடிப்படையில் தான் முடிவுகள் கூறினேன் என்று கூறினார். இதில் இருந்து நாணல் ~ சுயநலவாதி
முருங்கை மரம் ~ எதார்த்த வாதி
மூங்கில் ~ இலட்சிவாதி
நாம் மூங்கிலை போன்று இலட்சியவாதியாக இருக்க வேண்டும் என தெரிந்து கொண்டேன்
Comments
Post a Comment