பொது அறிவு

. * உலகில் அதிக அளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம், பனாமா கால்வாய்.
* விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த நாடு, ஜெர்மனி.
* திரவத்தங்கம் என்றழைக்கப்படுவது `பெட்ரோலியம்'.
* தபால்தலையை (ஸ்டாம்ப்) வட்ட வடிவமாக வெளியிட்ட நாடு மலேசியா.
* உடலில் ரத்தம் பாயாத பகுதி கருவிழி. *உலகின் மிகப்பெரிய பூங்கா கனடாவில் உள்ள `உட் பபெல்லோ நேஷனல் பார்க்'.
* உலகின் மிகப்பெரிய உயிரியல் பூங்கா அமெரிக்காவில் உள்ள `டொராண்டோ உயிரியல் பூங்கா'.
★1972-ம் ஆண்டு வங்காள தேசத்தின் தேசிய விளையாட்டாக கபடி அறிவிக்கப்பட்டது. சஞ்சீவனி, காமினி மற்றும் அமர் ஆகிய பெயர்களில் 3 விதங்களில் கபடி ஆட்டம் நடைபெறுகிறது. 1990-ம் ஆண்டு பீஜிங் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதல் முதலாக கபடி ஆட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் இருந்து இதுவரை நடைபெற்ற அனைத்து ஆசிய போட்டிகளிலும் இந்தியா தங்கப்பதக்கம் வென்றுள்ளது. 2004-ம் ஆண்டு முதல் உலக கோப்பைக்கான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், முதல் போட்டியில் இருந்து இதுவரை நடைபெற்ற போட்டிகளில் இந்தியா சாம்பியன் பட்டம் பெற்று முன்னணியில் திகழ்கிறது.

Comments

Popular posts from this blog

தனியாள் ஆய்வு

கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழி

கற்றலும் கற்பித்தலும்