கலிலியோ
கலிலியோ பற்றிய அறிய தகவல்கள்..............
தனது சூரிய மண்டலம் பற்றிய கருத்துகளால் வாட்டிக்கான் சிட்டி கத்தோலிக்க நிர்வாகத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான கலிலியோ, 1633ம் ஆண்டு வீட்டுக்காவலில் வைக்க உத்தவிடப்பட்டார். 1638ம் ஆண்டு அவருக்கு இரு கண்களும் பாதிக்கப்பட்டு, பார்வை இழந்தார். 1642ம் ஆண்டு தனது வீட்டில் உயிரிழந்தார். கலிலியோ இறந்து 100 ஆண்டுகள் கழிந்த பின், 1737ம் ஆண்டு அவரது உடலின் எஞ்சிய பாகங்கள் அனைத்தும், கல்லறையிலிருந்து மீண்டும் வெளியே எடுக்கப்பட்டு, சாண்டா குரோஸ் தேவாலயத்தில் அமைக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது ஆண்டன் பிரான்செஸ்கோ என்பவர் கலிலியோவின் வலது கை நடுவிரலை எடுத்து பத்திரப்படுத்தினார். அந்த விரல் தற்போது பதப்படுத்தப்பட்டு, இத்தாலியின் புளோரன்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment