முகப்பு ஆரோக்கியம் உலக நடப்புகள் அழகு..அழகு. உறவுகள் ஆன்மீகம் தாய்மை-குழந்தை நலன் சமையல் குறிப்புகள் ஃபேஷன் வீடு-தோட்டம் போல்ட் ஸ்கை » தமிழ் » Insync » Pulse கோவில் கருவறை ஏன் இருட்டாக இருக்கிறது என்று தெரியுமா? By Staff Published:Saturday, February 3, 2018, 9:30 [IST] இறை வழிபாடு இங்கே தொன்றுதொட்டு பல காலங்களாக இருந்து வருகிறது, கோவில்கள் குறித்தும் அங்கே இருக்ககூடிய தெய்வங்கள் குறித்தும் எண்ணற்ற விமர்சனங்கள் எழுந்தாலும் கடவுள் குறித்த பேச்சு எழாமல் இல்லை.  எந்த ஒரு பண்டிகை கொண்டாட்டமாக இருந்தாலும் பலருக்கும் முதலிடமாக இருப்பது கோவில் தான். கடவுள் என்று சொன்னதுவும் உங்களுக்கு முதலில் தோன்றுவது ஒரு கோவில் அதன் உள்ளே கருவறை என்று சொல்லப்படக்கூடிய இருட்டறையில் ஜோதி பிளம்பாக மஞ்சள் வெளிச்சத்தில் கருங்கல்லில் கடவுள் இருப்பார் . இந்தப் படம் உங்கள் நினைவுக்குள் எழுந்த அதே நிறத்தில் இந்த கட்டுரையையும் படியுங்கள் கோவில் அமைப்பு பற்றியும், சிற்பங்கள் பற்றியும் நிறைவான தகவலுடன் வந்திருக்கிறது.  முக்கிய அங்கம் : பொதுவாக கோவில் என்று சொன்னாலே அங்கே மூன்று முக்கிய அங்கங்கள் இருக்க வேண்டும். அவை ஸ்தலம், தீர்த்தம்,விருட்சம். ஸ்தலம் என்றால் மூலவர். மூலவர் இருக்கும் இடத்தை ஸ்தலம் என்பார்கள். அடுத்ததாக கோவிலில் இருக்கக்கூடிய குளம் தீர்த்தம் எனப்படும். விருட்சம் எனப்படுவது ஒவ்வொரு கோவிலுக்கும் மிகவும் முக்கியமானதாகும். தெய்வங்களின் சக்தியை இந்த விருட்சமே தாங்கி நிற்கின்றன. ஸ்தல விருட்சமாக ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு மரம் இருக்கும். கும்பாபிஷேகத்தின் போது அந்த ஸ்தல விருட்சத்தின் அடிமண்ணை எடுத்து வந்தே கும்பாபிஷேகம் யாகம் செய்வார்கள்.  மன்னர்கள் : கோவில் கட்டி தெய்வ வழிபாட்டை ஊக்குவித்த பெருமை மன்னர்களையே சாறும். கோவில் கட்ட எண்ணற்ற உதவிகளை செய்து, இறை வழிபாட்டை ஊக்குவித்திருக்கிறார்கள். கி.மு ஆயிரம் காலத்திலிருந்த மன்னர்கள் பெரும்பாலும் செங்கற்களால் கோவிலை கட்டினார்கள். இவற்றை ஏழு வகைகளாக பிரிக்கப்படுகிறது. தொடர்ந்து அதன் பிறகு எந்த மாற்றங்களும் பெரிதாக ஏற்படவில்லை. Image Courtesy   பல்லவர்கள் : பல்லவர்கள் காலத்தில் தான் குடைவரைக் கோவில்கள் கட்டப்பட்டன. பெரும்பாலும் இந்த குடைவரைகளில் கடவுளின் சிலை இருக்காது, இப்படி பல குடைவரைக் கோவில்கள் கட்டப்பட்ட பிறகு தான் கடவுள் சிலை வைக்கப்பட்டது. பல்லவ மன்னனான மகேந்திர வர்மன் கட்டத்துவங்கிய குடைவரைக் கோவில்கள் கோவில் கட்டிடக்கலையின் மைல்கல் என்றே சொல்லலாம். Image Courtesy  சோழர்கள் : கோவில்களின் பொற்காலம் என்று சொல்லலாம். இந்தக் காலத்தில் கோவில் கட்டிட அமைப்பில் பல்வேறு மாற்றங்கள் உண்டானது. பிம்மாண்டமாகவும் கலைநுணுக்கங்களுடனும் சோழர்கள் காலத்தில் பல்வேறு கோவில்கள் எழுப்பப்பட்டன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர்கள் கட்டிய கோவில்களில் இன்றளவும் பூஜைகள் நடந்து கொண்டிருக்கின்றன. Image Courtesy  பாண்டியர்கள் : பாண்டியர்கள் காலத்தில் கோபுரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது, அதன் பிறகு வந்த நாயக்கர் காலத்தில் கோவில் சீரமைப்பு பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, பல கோயில்கள் மீட்டெடுக்கப்படன. Image Courtesy  மனித உடல் : பொதுவாக கோவிலின் அமைப்பு மனித உடலுடன் ஒப்பிட்டு பார்க்கும் வகையில் அமைந்திருக்கும். ஒரு மனிதன் மல்லாந்து படுத்திருந்தால் அவனது பாதம் மேல்நோக்கி இருக்கும். அது போலவே கோபுரம் உயர்ந்திருக்கும். கொடி மரம் மனிதனி முதுகுத் தண்டுக்கு ஒப்பானது. வாயிலில் இருக்ககூடிய துவார பாலகர் நம் தோள்களைக் குறிக்கிறது. அதைத் தாண்டி இருக்கக்கூடிய மகாமண்டபம் மற்றும் அர்த்த மண்டபம் மனிதனின் உடல் போன்றது. கருவறை தான் தலை. Image Courtesy  கருவறை : கருவறையில் மூலவர் வீற்றிருப்பார். எட்டு எட்டாக அறுபத்து நான்கு சதுரங்கள் அல்லது ஒன்பது ஒன்பதாக 81 சதுரங்களில் கருவறை அமைக்கப்படும். கருவறையின் பின் சுவர் முதல் மையம் வரையில் பத்து பாகங்களாக பிரித்திருப்பர். பத்தாம் பாகத்தில் சிவன், ஒன்பதாம் இடத்தில் பிரம்மா, எட்டாம் இடத்தில் விஷ்ணு, ஏழாம் இடத்தில் முருகன், ஆறாம் இடத்தில் லட்சுமி அல்லது சரஸ்வதி, ஐந்தாம் இடத்தில் பிற பெண் தெய்வங்கள்,நான்காவது இடத்தில் விநாயகர்,மூன்றாவது இடத்தில் பைரவர்,இரண்டாவது இடத்தில் துர்க்கை ஆகிய சிலைகள் அல்லது உருவங்கள் இருக்கும். Image Courtesy

Comments

Popular posts from this blog

தனியாள் ஆய்வு

கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழி

கற்றலும் கற்பித்தலும்