முகப்பு ஆரோக்கியம் உலக நடப்புகள் அழகு..அழகு. உறவுகள் ஆன்மீகம் தாய்மை-குழந்தை நலன் சமையல் குறிப்புகள் ஃபேஷன் வீடு-தோட்டம் போல்ட் ஸ்கை » தமிழ் » Insync » Pulse கோவில் கருவறை ஏன் இருட்டாக இருக்கிறது என்று தெரியுமா? By Staff Published:Saturday, February 3, 2018, 9:30 [IST] இறை வழிபாடு இங்கே தொன்றுதொட்டு பல காலங்களாக இருந்து வருகிறது, கோவில்கள் குறித்தும் அங்கே இருக்ககூடிய தெய்வங்கள் குறித்தும் எண்ணற்ற விமர்சனங்கள் எழுந்தாலும் கடவுள் குறித்த பேச்சு எழாமல் இல்லை.  எந்த ஒரு பண்டிகை கொண்டாட்டமாக இருந்தாலும் பலருக்கும் முதலிடமாக இருப்பது கோவில் தான். கடவுள் என்று சொன்னதுவும் உங்களுக்கு முதலில் தோன்றுவது ஒரு கோவில் அதன் உள்ளே கருவறை என்று சொல்லப்படக்கூடிய இருட்டறையில் ஜோதி பிளம்பாக மஞ்சள் வெளிச்சத்தில் கருங்கல்லில் கடவுள் இருப்பார் . இந்தப் படம் உங்கள் நினைவுக்குள் எழுந்த அதே நிறத்தில் இந்த கட்டுரையையும் படியுங்கள் கோவில் அமைப்பு பற்றியும், சிற்பங்கள் பற்றியும் நிறைவான தகவலுடன் வந்திருக்கிறது.  முக்கிய அங்கம் : பொதுவாக கோவில் என்று சொன்னாலே அங்கே மூன்று முக்கிய அங்கங்கள் இருக்க வேண்டும். அவை ஸ்தலம், தீர்த்தம்,விருட்சம். ஸ்தலம் என்றால் மூலவர். மூலவர் இருக்கும் இடத்தை ஸ்தலம் என்பார்கள். அடுத்ததாக கோவிலில் இருக்கக்கூடிய குளம் தீர்த்தம் எனப்படும். விருட்சம் எனப்படுவது ஒவ்வொரு கோவிலுக்கும் மிகவும் முக்கியமானதாகும். தெய்வங்களின் சக்தியை இந்த விருட்சமே தாங்கி நிற்கின்றன. ஸ்தல விருட்சமாக ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு மரம் இருக்கும். கும்பாபிஷேகத்தின் போது அந்த ஸ்தல விருட்சத்தின் அடிமண்ணை எடுத்து வந்தே கும்பாபிஷேகம் யாகம் செய்வார்கள்

Comments

Popular posts from this blog

தனியாள் ஆய்வு

கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழி

கற்றலும் கற்பித்தலும்